கட்டுரைகள் > வெளியிடப்பட்ட ஆய்வுகள் > நட்டாத்தி நாடார்களின் பாரம்பரியம்: மானாடு பிராந்தியத்தில் அவர்களின் பரம்பரை மற்றும் கலாச்சார மரபுகள் பற்றிய வரலாற்று கண்ணோட்டம்.
நட்டாத்தி நாடார்களின் பாரம்பரியம்: மானாடு பிராந்தியத்தில் அவர்களின் பரம்பரை மற்றும் கலாச்சார மரபுகள் பற்றிய வரலாற்று கண்ணோட்டம்.
வெளியிடப்பட்ட ஆய்வுகள்
04/14/2025
முன்னுரை
நட்டாத்தி நாடார்கள் ஒரு வளமான வரலாற்று மரபைக் கொண்டவர்கள். அவர்கள் திருவழுதி வளநாடு மற்றும் மாநாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்ததற்கான சான்றுகள் உள்ளன. இக் கட்டுரை நட்டாத்தி நாடார்களின் பரம்பரை மற்றும் கலாச்சார மரபுகள் பற்றிய வரலாற்று கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கட்டுரை திரு. சீ. இராமச்சந்திரன், முனைவர் ஆ. தசரதன் மற்றும் திரு. அ. கணேசன் ஆகியோரின் ஆய்வுப் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டது.

நட்டாத்தி ஜமீன்தார்: திருவழுதி வைகுண்ட நாடன்.
மானாட்டின் நட்டாத்தி நாடார்கள்
மானவீர வளநாட்டின் வடக்கேயுள்ள திருவழுதி வளநாட்டை நட்டாத்தியரின் முன்னோரான சோழப் படைவீரர்கள் ஆண்டதாகக் கூறப்படுகிறது. நட்டாத்தியர் மரபில் வந்த சிலர் மானாட்டின் தென்பற்றுப் பகுதிகளில் அஞ்சு பற்று நாடுகளை முறையே மானாட்டு ஊர், நங்கைமொழி, சித்துவிளை, வல்லநாடு, அடப்பநாடு எனும் ஊர்களிலிருந்து அதிகாரம் செலுத்தியதாகவும் அவர்கள் குமாரசாமி நாடன் எனும் தங்கள் உறவினனை கிபி. 1650-இல் நாயக்கர் பிரதிநிதியிடமிருந்து ஆட்சி அதிகாரம் வாங்கச் செய்து ஆட்சி செய்ய வைத்ததாகவும் குமாரசாமி நாடன் கதை கூறுகின்றது. நட்டாத்தியர் பற்றிய கல்வெட்டுகள் திருவழுதி வளநாட்டுப் பெருங்குளத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
நட்டாத்தி நாடார்களின் கலாச்சார மரபுகள் மற்றும் கொங்கு நாட்டுடன் அவர்களின் தொடர்பு
இல்லம் என்பதற்குரிய தெலுங்குச் சொல்லான இண்டி என்பது இவர்களுடைய 63 உட்பிரிவுகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவதால் இவர்கள் தெலுங்குச் சோழர்களைச் சார்ந்து குடியேறிய குடிபடை வீரர்களாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணத் திருவிழாவின்போது மணமகள் வள்ளியின் சார்பாக நட்டாத்தியர் பங்கேற்கும் மரபு உள்ளது. கொங்கு வேளாளர்களின் குலகுருவாகிய குளந்தை ஆனந்தன் என்பவர் நட்டாத்திப் பிரிவினைச் சேர்ந்தவர் என ஆவணங்களால் தெரியவருகிறது. குளந்தை என்ற சொல் தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்திப் பண்ணையையொட்டி அமைந்துள்ள பெருங்குளத்தைக் குறிப்பதாகும்.
நட்டாத்தியர்களின் தலைவராகவும் கிராம முனிசீப்பாகவும் இருந்த வைகுண்ட நாடன் என்பவர் கி.பி.1860ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடம் சன்னது பெற்றுள்ளார். சன்னதின்படி, கொங்குநாட்டுக்கு வைகுந்த நாடார் தம் பாதுகாவலருடன் பல்லக்கில் செல்லவும், உரிய மரியாதைகளைப் பெற்றுத் திரும்பவும், உரிமை வழங்கப்பட்டுள்ளது. நட்டாத்தியர்க்குக் கொங்குநாட்டுடன் உள்ள தொடர்பு விரிவாக ஆராயத்தக்கதாகும். தெலுங்குச் சோழர்களுள் ஒரு பிரிவினர் கி.பி.16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கொங்கு நாட்டுப் பகுதியில் குடியேறினர் என்று தெரியவருகிறது. நட்டாத்தியின் அதிபதியான திருவழுதி வைகுண்ட நாடன் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஜமீன்தாராக இருந்தவர்.
முடிவுரை
கோயில் மரபுகளில் நட்டாத்தி நாடார்களின் பங்கும், ஆங்கிலேயர்களிடமிருந்து அவர்கள் பெற்ற அங்கீகாரமும் சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. கல்வெட்டுகளும் நாட்டுப்புறக் கதைகளும் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. அவர்களின் வரலாற்று பங்களிப்புகள் மற்றும் பரம்பரை பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்த மேலும் ஆராய்ச்சியின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
- மறைந்த நிலையிலிருந்து வெளிச்சத்திற்கு: சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய ஆவணங்கள் மூலம் நாடார் சமூகத்தின் வரலாற்றை மறுகட்டமைத்தல்.
- தொல்பொருள் சான்றுகளை ஒன்றாக இணைத்துப் பார்ப்போம்: உன்னத சான்றோர்களுக்கும் நாடார்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன.
- நாடார் சமூகத்தைச் சுற்றியுள்ள வரலாற்றுத் தவறான கருத்துக்களைப் பற்றிய ஆய்வு: 19 ஆம் நூற்றாண்டு நாடார்களின் உண்மையான சமூக நிலைப்பாடு.
குறிப்புகள்
- ஆ. தசாதன் மற்றும் அ. சுணேசன். "மானவீர வள நாட்டுக் கல்வெட்டுகள்." தமிழில் ஆவணங்கள், பதிப்பிதது ஆ. தசரதன், தி. மகாலட்சுமி, சூ. நிர்மலாதேவி, மற்றும் த. பூமிநாகநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு, 2001, பக். 52-59.
- சீ. இராமச்சந்திரன். வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு, 2004.
- ஹார்டுகிரேவ், இராபர்ட். எல். தமிழக நாடார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழக அச்சகம், 1969.